Trending News

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

(UTV|COLOMBO) – எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பிலிருந்து கண்டி மற்றும் பதுளைக்கு விசேட ரயிலொன்று சேவையில் இணைத்துக் கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் கொழும்பு – கோட்டையிலிருந்து காலை 9 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ள ரயில், முற்பகல் 11.30 மணிக்கு கண்டியை சென்றடையும் என ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த சொகுசு ரயில் கண்டியிலிருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படுவதுடன் இரவு 7.30 மணியளவில் கொழும்பை வந்தடையவுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, எதிர்வரும் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளைக்கு விசேட ரயிலொன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ரயில் பேராதனையூடாக பதுளைக்கு பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையுடனான இருபதுக்கு – 20 தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு இரு தலைவர்கள்

Mohamed Dilsad

Accomplice of ‘Kanjipani Imran’ arrested

Mohamed Dilsad

விஜய் சேதுபதி படத்தின் ரீமேக்கில் நானி

Mohamed Dilsad

Leave a Comment