(UTV|COLOMBO) – ஜப்பானில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள பிரமாண்ட மைதானத்தை அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே திறந்து வைத்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 24 முதல் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதற்காக 68,000 பேர் அமர்ந்து போட்டிகளைக் காணும் வகையில் சுமார் 1.25 பில்லியன் டொலர் செலவில் பிரமாண்ட மைதானம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அரங்கில் ஆரம்ப விழா, நிறைவு விழா உட்பட தடகளப் போட்டிகளும் கால்பந்துப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.