(UTV|COLOMBO) – பௌத்த தர்ம போதனைகளுக்கமைய அனைத்து மதங்களையும், இனங்களையும் சிங்கள மக்கள் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிங்கள மக்கள் மட்டுமே இந்த நாட்டிற்கு உரிமை கோர முடியும் என்றும் தமிழ், முஸ்லிம் மக்கள் இலங்கையின் வந்தேறு குடிமக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.