(UTV|COLOMBO) – அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை அமுல்படுத்தவும் மற்றும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைகளுக்கு விநியோகிப்பதை உறுதி செய்வதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனைத் தவிர அரிசி விநியோக நிலையங்களிலுள்ள கையிருப்பினை பரிசோதித்து, நாளாந்தம் அவற்றை விநியோகிப்பதற்காக குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசி வகைகள் சந்தைக்கு கொண்டுவரப்படும் அளவு குறித்து ஆய்வு செய்வதோடு அவ்வாறு கொண்டுவரப்படும் அரசி மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் அளவு தொடர்பிலும் பரிசோதித்து மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.