(UTV|COLOMBO) – டெல்லியில் பதற்றம் நிறைந்த இடங்களில் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியின் சீலாம்பூர் மற்றும் பிரிஜ்புரி ஆகிய இடங்களில் ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்நிலையில், அரச அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம், சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.