(UTV|COLOMBO) – Semi Luxery எனப்படும் அரை சொகுசு பேருந்துகளை இரத்துச் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
அதற்கு தேவையான கலந்துரையாடல் நடவடிக்கைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விசேடமாக அரை சொகுசு பேரூந்து வண்டிகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 10,000 பயணிகளை மையப்படுத்தி நடத்திய ஆய்வில் 100 வீதமான பயணிகள் அரை சொகுசு பேரூந்து வண்டிகளை இரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த யோசனையை ஆராய்ந்து அரை சொகுசு பேருந்து சேவைகளை குறுகிய காலத்திற்குள் நிறுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அடுத்த மாதத்துக்குள் அரை சொகுசு பேருந்தை நிறுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.