(UTV|COLOMBO) – நீர் மூலமான மின் உற்பத்தி 68.34 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது.
தற்பொழுது பெய்யும் மழையின் காரணமாக மின் உற்பத்தி செய்யப்படும் அனைத்து நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 94.55 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்று பெய்த மழைக்கு அமைவாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு 68.34 சதவீதமாகும்.
மேலும், அனல் மின் நிலையத்தின் மூலம் 29.13 சதவீதமும், சூரிய சக்தியின் மூலம் 0.38 சதவீதமும், காற்றின் மூலம் 1.5 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நேற்றைய தினம் 32.83 ஹிகாவேற்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை எரிபொருளை பயன்படுத்தி தனியார் துறையினர் உற்பத்தி செய்யும் மின்சாரம் நேற்றைய தினம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.