Trending News

சீரற்ற காலநிலை காரணமாக 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு [VIDEO]

(UTV|COLOMBO ) – நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த 13 மாவட்டங்களைச் சேர்ந்த 112 பிரதேச செயலக பிரிவுகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக 19,095 குடும்பங்களைச் சேர்ந்த 65ஆயிரத்து 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்ட 4,704 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்த 510 பேர் 123 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண வசதிகள் மற்றும் மீட்பு பணிகள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் தேசிய நிவாரண சேவைகள் நிலையம், அனர்த்த மத்திய நிலையம் மற்றும் பாதுகாப்பு படையினர் நிவாரண பொருட்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மோசமான காலநிலை காரணமாக 62 வீடுகள் முழு அளவிலும் 1463 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய காப்புறுதி நிதியத்தின் ஊடாக திருத்த பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தளை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் யக்கல, பல்லேவத்த, நாவுல, வில்கமுவ மற்றும் ரத்தொட்ட ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுளளது. அதேபோன்று கண்டி மாவட்டத்தின் உடுதும்புர, யடிதும்புர பிரதேசத்திற்கும் நுவரெலிய மாவட்டத்தின் வலப்பன பிரதேசத்திற்கும் பதுளை மாவட்டத்தின் பண்ராவெல, வெலிமட ஹாலிஎல, ஊவ பரணகம பிரதேசத்திற்கும் இரத்தினபுரி மாவட்டத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பராக்கிரம சமுத்திரத்திரம், இராஜாங்கன, அங்கமுவ. கலாவௌ, நாச்சாதுவ, யான்ஓய நீர்தேக்கங்களினதும், தப்போவ, இனிமிடிய, தெதுருஓய, அம்பகொலவௌ நீர் தேக்கங்களினதும் ரம்பகன்ஓய, லுனுகம்வெஹர ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது

மேலும், உன்னச்சி, கந்தளாய் குளம், கிளிநொச்சி இரணமடு குளம் ஆகிய வற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் நீர்பாசன திணைக்களம் 24 மணி நேர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Prevailing winds, rain expected to continue

Mohamed Dilsad

Three arrested with 12,000 kgs of Dust Tea

Mohamed Dilsad

එස්.එම්.රංජිත්ගේ සහ නෑනාගේ ඇප ඉල්ලී­මට අල්ලස් කොමි­සමේ විරෝ­ධය

Editor O

Leave a Comment