(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மீள் பரிசீலனைக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்வி பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 0112 78 42 08 மற்றும் 0112 78 45 37 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பாடசாலை பரீட்சை ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேற்று சபையை தொடர்புகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.