(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டன.
கல்வி பொது தராதர பரீட்சை பெறுபேறுகளுக்கான அமைவாக, அகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல்கள் இம்முறை வெளியிடப்படவில்லை.
இதேவேளை, கொழும்பு மற்றும் ஸ்ரீஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்கு சொந்தமான பாடசாலைகளின் பெறுபேறுகள் அடங்கிய ஆவணங்களை இன்று முற்பகல் 10 மணிக்கு பின்னர் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேற்று சபையினால் அதிபர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன
2019ஆம் ஆண்டு க.பொ.தராதர உயர்தரப் பரீட்சையின் கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர் தருச சிஹான் பொன்சேகா கணிதப் பிரிவில் (புதிய பாடத்திட்டம்) முதல் இடத்தை தனதாக்கியுள்ளார்.
கலை பிரிவில் (புதிய பாடத்திட்டம்) கொழும்பு தேவி மகளீர் பாடசாலையை சேர்ந்த தேசானி வெலிகமகே முதலிடத்தை தனதாக்கியுள்ளார்.
அதேபோல், கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியை சேர்ந்த நிபுன விராஜ் தேசிய ரீதியில் கலைப்பிரிவில் (பழைய பாடத்திட்டம்) முதல் இடத்தை பெற்றுள்ளார்.
பதுளை மத்திய மகா வித்தியாலயத்தின் உவிந்து பிரவீன் சுமனசேகர கணிதப் பிரிவில் (புதிய பாடத்திட்டம்) இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
மேலும், பின்னவல தேசிய பாடசாலையின் மாணவர் ஏ.தர்ஷன இசுருசிறி சம்பத் கணிதப்பிரிவில் (பழைய பாடத்திட்டம்) முதலிடத்தை பெற்றுள்ளார்.
பொறியியல் தொழிநுட்ப பிரிவில் (புதிய பாடத்திட்டம்) கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் வினுர ஓசத முதலிடத்தை பெற்றுள்ளார்.
அதேபோல், உயிரியல் விஞ்ஞான பிரிவில் கொழும்பு விசாக வித்தியாலயத்தின் சச்சினி விஜேவர்தன முதலிடத்தை பெற்றுள்ளார்.
இதற்கமைய பரீட்சையில் தோற்றியிருந்த 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்ச்சாத்திகளுள் ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 126 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.