Trending News

உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண் மலாலா யூசுப்சாய்

(UTV|COLOMBO) – கடந்த 10 வருடங்களில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐக்கிய நாடுகள் கௌரவித்துள்ளது

பெண்களின் கல்விக்காக போராடிய மலாலாவை கடந்த 2012-ம் ஆண்டு தலீபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். எனினும் இந்த தாக்குதலில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

அதன்பிறகு அவர் பாகிஸ்தான் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க தொடங்கினார். 2014-ம் ஆண்டு அவருக்கும், இந்தியாவின் கைலா‌‌ஷ் சத்யார்த்திக்கும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

2017-ம் ஆண்டு ஐ.நா.வின் அமைதிக்கான தூதரானார்.

மலாலா யூசுப்சாயின் அயராத உழைப்பு, கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக அவரை உருவாக்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Related posts

Karannagoda to appear before CID next week

Mohamed Dilsad

மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட ஏற்பாடு

Mohamed Dilsad

Police to check all vehicles

Mohamed Dilsad

Leave a Comment