(UTVNEWS | COLOMBO) –விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மேலதிக நீதவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக ராஜித்த சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.