(UTV|COLOMBO) – இந்திய மற்றும் இலங்கை நாடுகளுக்கும் இடையில் உள்ள மிருக பரிமாற்ற முறையின் அடிப்படையில் இந்தியாவில் ஒடீஷாவின் புபர்நேச்சர் பகுதியில் உள்ள நன்தன்கனன் மிருகக்காட்சிசாலைக்கு 04 இலங்கையின் ஆசிய நாட்டு சிங்கங்கள் எடுத்துச் செல்ல அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நன்தன்கனன் மிருகக்காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் ஜயந்த தாஸ் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த சிங்கங்களுக்கு பதிலாக இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பறவைகள் அல்லது புலிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக தீர்மானிப்பட்டுள்ளது.
இதற்காக இந்திய அரசாங்கத்தினதும் அனுமதி கிடைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன