Trending News

சீனாவின் நீர்மூழ்கி கப்பலை இலங்கையில் நங்கூரமிட மறுப்பு?

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை நங்கூரமிடச் செய்வதற்கான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியின்படி இலங்கையில் ஒரு மாத காலத்துக்கு தமது நீர்மூழ்கி கப்பலை நங்கூரமிடச் செய்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

ஆனால் இதற்கான கோரிக்கையை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு ஒக்டோர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீ.பொ.பெ கட்சிக்கு 127 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள்- டிலான் [VIDEO]

Mohamed Dilsad

வெளிநாட்டுப் பிரஜைகள் நால்வர் கைது

Mohamed Dilsad

India Makes History, Indian Space Research Organization (ISRO) Launches 104 Satellites In One Go: 10 Points – [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment