(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்க்பிங்க் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்கில் நடைபெற்ற “ஒரே பாதை ஒரு இலக்கு” என்ற சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
சிறிய தீவான இலங்கை, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை சேவையில் முக்கியத்துவமிக்கது என சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான இந்த வட்டமேசை மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 30 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.