Trending News

சிங்கப்பூர் விமான நிலையத்தில் தீ விபத்து!

(UDHAYAM, COLOMBO) – சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் (டெர்மினல் 2) ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த முனையம் மூடப்பட்டது.

சிங்கப்பூருக்கான விமான சேவைகளும், சிங்கப்பூரில் இருந்து உலகின் மற்ற பகுதிகளுக்குப் புறப்படும் விமானங்களின் சேவைகளும் இதனால் பாதிப்படைந்திருக்கின்றன.

இன்று மாலை 5.43 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சிங்கப்பூர் பொது தற்காப்பு அதிகாரிகள் உடனடியாக பதில் நடவடிக்கையில் இறங்கி தீயை அணைத்ததாகவும் வௌிநாட்டு செய்திகள் தெரிவித்தன.

சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் இருந்து புறப்படும் பயணிகள் தாமதங்களுக்குத் தயாராக இருக்கும்படி சாங்கி விமான நிலையத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கணக்காளர் ஒருவருக்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை

Mohamed Dilsad

கிளிவெட்டி மாஹா வித்தியாலயத்திற்கு முன்பாக பாலியல் துன்புருத்தல்களுக்கு எதிராக மாணவர்கள் கண்டன ஆர்பாட்டம்

Mohamed Dilsad

කතානායක ආචාර්යය අශෝක රංවලගේ, ආචාර්යය උපාධිය ගැන ඉදිරියේදී ප්‍රකාශයක් කරාවි – කැබිනට් මාධ්‍ය ප්‍රකාශක නලින්ද ජයතිස්ස

Editor O

Leave a Comment