(UDHAYAM, COLOMBO) – குறிப்பிட்ட இடங்களைத் தவிர பஸ் தரிப்பிடங்களில் பயணிகளை ஏற்றும் மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளின் அனுமதிப் பத்திரங்களை தடை செய்யப்படவுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு இதற்கான பணிப்புரை வழங்கியுள்ளார்.
அடுத்த மாதம் 1ம் திகதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபடும். பஸ் வண்டிகள் குறித்து விசாரிப்பதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.
குறிப்பிட்ட இடங்கள் தவிர்ந்த வேறு இடங்களில் பயணிகளை ஏற்றும் பஸ் வண்டிகளை சிசிரிவி கமரா மூலம் இனங்காண்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தந்த இடங்களில் கமராக்களைப் பொருத்துமாறும் அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.