Trending News

ஹட்டனில் போலி சுகாதரபரிசோகர்.விலைக்கட்டுப்பாட்டு அதிகாரி என கூறி பணம் கரக்க முற்பட்டவர் தப்பியோட்டம் – [IMAGEs]

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் நகர வர்த்தக நிலையங்களில்  சுகாதார பரிசோதகராகவும் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் தன்னை அறிமுகம் செய்து கொண்டு லஞ்சம் வாங்க முற்பட்ட சம்பவமொன்று 12.07.2017 ஹட்டனில் இடம்பெற்றுள்ளது

சீ.சீ.டீ.வி கமரா பொருத்தாக வர்த்தக நிலையங்களிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ஹட்டன் நகரிலிலுள்ள ஹோட்டல் ஒன்று தன்னை நுவரெலியா மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு காரியலய அதிகாரி என கூறி ஹோட்டலில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் வழக்கு பதிவு செய்தால் 25.000 ரூபா வரையில் தண்டம் அரவிடப்படும் என கூறி வழக்கு வழக்கு பதிவு செய்யாதிருக்க பணம் தருமாறு கோரியுள்ளார்

ஹோட்டலில் கடமையில்இருந்தவர் உரிமையாளர் இல்லையென்றும் தன்னால் பணம் வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் குறித்த போலி விலைக்கட்டுப்பாட்டு அதிகாரி மீண்டும் ஒரு மணித்தியலாயத்தில் வருவதாகவும் அதற்குள் பணத்தை தயார் செய்து வைக்குமாறும் தெரிவித்து சென்றுள்ளார்

அதே  வேலை  பலசரக்கு கடையொன்றுக்கு  சென்ற அதே நபர் தான் சுகாதாரபரிசோதகர் என அறிமுகம் செய்து பல்வேறு குறைபடுகள் காணப்படுவதாக கூறி லஞ்சம் கோரியுள்ளர் குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட கடையுரிமையாளர் தனது கைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டு போலியாக வந்த சுகாதார பரிசோதகரிடம் அடையாள அட்டையை கோட்ட போது உடனடியாக அவ்விடத்திலிருந்து தப்பி ஒடியதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்

சம்பவம் தொடர்பில் நுவரெலியா விலைக்கட்டுபாட்டு அதிகாரிகளுக்கும் ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகர் ராமையா பலகிருஸ்னன் ஆகியோருக்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முறையிட்டதையடுத்து  வர்த்த நிலையங்களுக்கு வருகைத்தந்த அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டதுடன் சந்தேகத்திற்கிடமாக வருகைத்தருவோரிடம் அடையாள அட்டையை காட்டுமாறு கேட்கும் படியும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில்  உடனடியாக எமது காரியலயங்களுக்கு அறிவிக்குமாறும் வர்த்தகர்களுக்கு அறிவுருத்தல் விடுத்தனர்

மேலும் கைபேசியில் படத்தில்  கணப்படும் சந்தேக   நபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/07/03-2.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/07/04-1.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/07/05.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/07/06-1.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/07/01-1-1.jpg”]

 

Related posts

6,000 Tramadol narcotic tablets Seized by STF

Mohamed Dilsad

Jim Carrey in talks for the “Sonic” movie

Mohamed Dilsad

சொந்த வாகனம் வைத்திருக்கும் மற்றும் வௌிநாட்டு சுற்றுலா செல்வோரும் வரி செலுத்த வேண்டும்

Mohamed Dilsad

Leave a Comment