Trending News

திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளர் அல்-ஹாஜ் ஜிப்ரி ஹனீபா காலமானார்

(UDHAYAM, COLOMBO) – திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளரும், ஆயுட்கால தலைவருமான அல்-ஹாஜ் ஜிப்ரி ஹனீபா தனது 68ஆவது வயதில் காலமானார்.

1984 ஆம் ஆண்டு திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையம் நிறுவப்பட்டது முதல் அவர் குறித்த நிலையத்தின் ஆயுட்கால தலைவராக செயற்பட்டு வந்தார்.

கடந்த சில காலமாக சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் காலமாகியதாக இஸ்லாமிய அங்கவீனர் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (18) காலை 10 மணியளவில் திஹாரிய மஸ்ஜிதுல் ரவ்ழா ஜூம்ஆ பள்ளிவாசளில் நடைபெறும்.

Related posts

India must rethink opposition to Chinese investment in Sri Lanka – Chinese media

Mohamed Dilsad

சஜித் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா

Mohamed Dilsad

பழவகை உற்பத்தி கிராமங்கள் – தென் மாகாணத்தில் ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment