Trending News

வடக்கு மாகாண வைத்தியசாலைகளின் தாதியர்கள் நாளை பணிப் புறக்கணிப்பு

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் நாளைக் காலை 7 மணி தொடக்கம் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணை மருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக வடமாகாண அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் க.ஜனார்த்தனன் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடு, பதவியுயர்வு, மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, கைவிரல் அடையாள வருகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் நாளை புதன்கிழமை காலை 7 மணி தொடக்கம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 7 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.

நோயாளர்களினதும் பொதுமக்களினதும் நன்மை கருதி வேலை நிறுத்தத்தின் போது உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கான அவசர சிகிச்கைக்கு மாத்திரம் தாதி உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என வடமாகாண அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்களும் நாளைக் காலை 7 மணி தொடக்கம் 24 மணிநேர பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவர் என அந்த வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் சங்கத் தலைவர்  அறிவித்துள்ளார்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

Five killed in US workplace shooting

Mohamed Dilsad

Trump fires Attorney General Jeff Sessions

Mohamed Dilsad

நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ள சடலங்கள்

Mohamed Dilsad

Leave a Comment