Trending News

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அழகுக்கலை நிபுணர்களுக்கு ஜனாதிபதி விருது

(UTV|COLOMBO):அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரத் துறையைச் சேர்ந்தவர்களை பாராட்டி விருது வழங்கும்; நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

 

அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரத்துறையில் உள்ளவர்களை கௌரவிக்கும் முதலாவது நிகழ்வு இதுவாகும் . இத்துறையின் முன்னேற்றத்திற்காக இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார கலைஞர்கள் 16 பேருக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.

 

இந்த நிகழ்வில் அமைச்சர்களான சந்திம வீரக்கொடி, தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே, கருணாரத்ன பரணவித்தான ஆகியோர் உள்ளிட்ட அதிதிகளும் 350க்கும் மேற்பட்ட அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

“Country must be free of separatism” – Sujeewa Senasinghe

Mohamed Dilsad

மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து

Mohamed Dilsad

Australia cricketer O’Keefe fined for drunken remarks

Mohamed Dilsad

Leave a Comment