Trending News

உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

(UTV|INDIA)-மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நிமிர்’.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் – நமீதா பிரமோத், பார்வதி நாயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் உதயநிதி ஒரு போட்டோகிராபராக நடித்திருக்கிறார். தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை அதிக விலை கொடுத்து விஜய் டிவி கைப்பற்றியிருக்கிறது.
இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை விரைவில் வெளியாக இருப்பதாக சசமீபத்தில் உதயநிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து விஜய் டிவியின் ‘பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், ” குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய அழகான  படங்களை கண்டெடுத்து வாங்குவதில் நாங்கள் என்றுமே முனைப்போட்டுள்ளோம். ‘நிமிர்’ அவ்வாறான ஒரு ஜனரஞ்சக குடும்ப படம். இப்படத்தின் சேனல் உரிமத்தை பெற்றுள்ளதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உதயநிதி சாருடனும் இயக்குனர் ப்ரியதர்ஷன் சாருடனும் வரும் காலங்களிலும் சேர்ந்து பணிபுரிய ஆவலோடு உள்ளோம் ” என்றார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Wigneshwaran to commemorate victims of war tomorrow

Mohamed Dilsad

ශ්‍රී ලංකා ආර්ථිකය 2024 වසරේ පළමු කාර්තුව තුළ සියයට 5.3% ක ධනාත්මක වර්ධනයක්

Editor O

தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

Mohamed Dilsad

Leave a Comment