Trending News

ஈரான் தூதுவர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஈரான் மற்றும் இலங்கைக்கிடையிலான இரு தரப்பு நல்லுறவு தொடர்பில் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திரு.மொஹமட் சைரி அமிரானிக்கும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவிற்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சில் இருவருக்குமிடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. இந்தசந்திப்பை நினைவுகூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

 

இந்த சந்திப்பில் இராணுவத்தைசேர்ந்த உயர்அதிகாரி மேஜர் ஜெனரல் டிஏஆர் ரணவக்க ஈரான்பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Palaniswami writes to Modi seeking immediate release of Indian fishermen

Mohamed Dilsad

Sri Lankan woman held for trying to smuggle drugs

Mohamed Dilsad

මන්ත්‍රීවරුන්ට ප්‍රජාතන්ත්‍රවාදය පිළිබඳ විශේෂ වැඩමුලුවක්

Mohamed Dilsad

Leave a Comment