Trending News

உறவினர்கள் இருவரால் 03 பிள்ளைகளின் தந்தை தடியால் அடித்து கொலை

(UTV|COLOMBO)-நுவரெலியா – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் கடுங்காயங்களுடன் அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டம் உட்லெக் பிரிவில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதில் இருவ ​சேர்ந்து குறித்த நபரை தடியால் தாக்கியுள்ளதாக பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று (14) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி தோட்டத்தில் வசிக்கும் 32 வயதுடைய ராமையா பெரியசாமி மூன்று பிள்ளைகளின் தந்தை என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

சம்பவத்தை கண்ட உயிரிழந்தவரின் மகன் ஒருவர் தனது அப்பாவை அடித்ததாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான உயிரிழந்த நபரின் உறவினர்கள் இருவரை கைது செய்த அக்கரப்பத்தனை பொலிஸார் இவர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இக் கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் வாரம் வெளியிடப்படும்

Mohamed Dilsad

සෞදියේ විදේශීය විශ්වවිද්‍යාල ශාඛා විවෘත කිරීමට අවසර

Mohamed Dilsad

Uruguay to sell cannabis in pharmacies from July

Mohamed Dilsad

Leave a Comment