Trending News

2018க்காக SLIIT மாணவர் சேர்ப்பு ஆரம்பம்

(UTV|COLOMBO)-SLIITல் 2018ம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. பெப்ரவரி 5ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள பட்டப்படிப்புகளுக்காக இவ்வாறு ஆட்சேர்ப்பு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற கணினியியல், வணிகம்,பொறியியல், கட்டடக்கலை மற்றும் நில அளவையியல் போன்ற கற்கைகள்  SLIITல் முன்னெடுக்கப்படுகின்றன.

விருந்தோம்பல் முகாமைத்துவத்துறையிலும் கல்வியகத்தினால் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இதற்காக அவுஸ்திரேலியாவின் வில்லியம் அங்கிலிஸ் கல்வியகத்துடன் SLIIT கைகோர்த்துள்ளது.

கல்வியகத்தினால் வழங்கப்படும் கட்டடக்கலை, நில அளவையியல் மற்றும் வணிக முகாமைத்துவம் போன்ற கற்கைகள் பிரித்தானியாவின் Liverpool John Moorers பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. கட்டடக்கலை பயிற்சியை பூர்த்தி செய்ய 5 ஆண்டுகள் தேவைப்படுகின்றன.  SLIIT இனால் 2 கட்டங்களில் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. இதில் 3 வருட முழு நேர இளமானி பட்டக்கற்கையும், 2 வருட மாஸ்டர்ஸ் கற்கையும் அடங்கியுள்ளன.

நில அளவையியல் கற்கையினால் மாணவர்களுக்கு பிரத்தியேகமான செலவு முகாமைத்துவம் மற்றும் ஒப்பந்த முகாமைத்துவ ஆளுமைகள் வழங்கப்படுகின்றன. இதனூடாக மாணவர்களுக்கு மூன்று வருட இளமானி பட்டத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

நான்கு ஆண்டுகளுக்கான SLIITன் BSc (Hons) தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, தகவல் கட்டமைப்பு பொறியியல், மென்பொருள் பொறியியல்ää ஒன்றிணைக்கப்பட்ட ஊடகம், சைபர் பாதுகாப்பு, தரவு விஞ்ஞானம் மற்றும் கணினி கட்டமைப்புகள் மற்றும் வலையமைப்பு பொறியியல் போன்றவற்றை வழங்குகின்றன. மூன்றாண்டுகளுக்கான BSc கற்கை நெறியின் மூலமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட பல்லூடக தொழில்நுட்பம் போன்றன வழங்கப்படுகின்றன.

எந்தவொரு SLIIT  நிலையத்திலிருந்தும் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்தும் மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன்,மேலதிக விவரங்களைwww.sliit.lk இலிருந்து பெறலாம்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Brexit: PM to try again for 12 December election after MPs reject plan

Mohamed Dilsad

எம்.சி.சி உடன்படிக்கை குறித்து அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

Mohamed Dilsad

Palestinian conflict: Diaries of childhood in Israeli military detention  

Mohamed Dilsad

Leave a Comment