Trending News

நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை இல்லை

(UTV|SAUDI ARABIA)-சவூதி அரேபியாவில் சுமார் 6 ஆயிரம் தங்கம் மற்றும் வெள்ளி நகை தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 35 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இனி நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களை பணியில் சேர்க்கக்கூடாது என தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. உள்ளூர்மயமாக்குதலின் ஒரு பகுதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அதிகாரத்தின் கீழ் 13 பிராந்தியங்கள் உள்ளன. அவற்றில் குவாசிம், டாபக், நாஜ்ரன், பாகா, அசிர், வடக்கு எல்லை மற்றும் ஜாசான் ஆகிய 7 பிராந்தியங்களில் உள்ள சவூதி மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு நகைக்கடைகளில் பணி அமர்த்தப்படுவார்கள்.

இது குறித்து தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் காலித் அபா அல்-காய்ல் கூறுகையில், ‘நாட்டில் உள்ள கடைகளில் உள்ளூர் மக்கள் அதிக அளவில் வேலைப்பார்ப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் ஆய்வாளர்கள் 5,960 கடைகளில் நடத்திய ஆய்வில், 210 கடைகளில் வெளிநாட்டவர்கள் பணி புரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கடைகள் அரசு நிறுவனங்களின் உதவியுடன் விரைவில் உள்ளூர்மயமாக்கப்படும்.’ என அவர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று முதல் கட்டணம் வசூல்?

Mohamed Dilsad

டி-20 தொடரில் இருந்து மெத்தியூஸ் நீக்கம் – லசித் விளையாடுவாரா?

Mohamed Dilsad

இன்று(03) முதல் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு

Mohamed Dilsad

Leave a Comment