Trending News

வனாந்தர செய்கையிலிருந்து சிறந்த தொழில் வாய்ப்புகள் தோற்றம்

(UTV|COLOMBO)-புவியின் நிலைத்திருப்புக்கு சூழல் பாதுகாப்பு குறித்து உலகம் கவனம் செலுத்தி வரும் நிலையில், வணிக வனாந்தரச்செய்கை புவிக்கட்டமைப்பை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கையில் பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது. இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு உலகளவில் பெருமளவான மக்கள் ஊக்குவிக்கப்பட்ட வண்ணமுள்ளனர். கடந்த 15 வருடங்களில் 26000 முதலீட்டாளர்கள் சதாஹரித பிளான்டேஷன்ஸ் உடன் கைகோர்த்து நாட்டின் வனாந்தர செய்கையை மேம்படுத்துவதற்கு வெற்றிகரமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

கிளை வலையமைப்பு கடந்த ஆண்டுகளில் 25 ஆக உயர்ந்துள்ள நிலையில், 2002ல் ஹொரணயில் ஆரம்பிக்கப்பட்ட போது காணப்பட்ட சதாஹரித ஊழியர்களின் எண்ணிக்கை 20 இலிருந்து 700 ஆக அதிகரித்துள்ளது. வணிகச்செய்கையில் தகைமை வாய்ந்தவர்கள் மற்றும் இதர விவசாயத்துறையுடன் தொடர்புடைய நிபுணர்கள்ää விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையைச்சேர்ந்த நிபுணர்கள் வணிக வனாந்தர செய்கை மூலமாக உறுதியான மற்றும் உயர்வான தொழில் நிலையை சதாஹரித நிறுவனத்தில் கொண்டிருக்க முடியும் என்பதை உணர்ந்துள்ளனர்.
முக்கியமாகää சதாஹரித மூலமாக நிறுவனத்தின் வனாந்தர செயற்திட்டங்களில் பணியாற்றும் பெருமளவான ஊழியர்களுக்கு தொழில் தன்னிறைவு வழங்கப்படுகின்றதுடன், அவர்களுக்கு திருப்திகரமான வருமானத்தை வழங்குவதாகவும் அமைந்துள்ளது. “சூழலை பாதுகாப்பதற்காக தமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை எமது ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், எதிர்கால தலைமுறைக்கு அர்த்தமுள்ள வகையில் அதனை பேணுவதில் இவர்கள் பங்களிப்பு வழங்கி வருகின்றனர். எமது விற்பனை ஊக்குவிப்பு ஊழியர்களுக்கும் தமது தொழில் நிலையில் முன்னேற்றம் காண்பதற்கு போதியளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. கனிஷ்ட நிறைவேற்று அதிகாரி எனும் நிலையிலிருந்து, இணைந்த பொது முகாமையாளர் எனும் சிரேஷ்ட முகாமைத்துவ நிலைக்கு உயர்வது என்பது சகல ஊழியர்களுக்கும் காணப்படும் வாய்ப்பாக அமைந்துள்ளது. தமது இலக்குகளை எய்தி, அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஊழியர்களுக்கு இந்த வாய்ப்புக்கிட்டும்” என சதாஹரித நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் ஜயம்பதி மிரான்டோ தெரிவித்தார்.

சதாஹரித ஊழியர்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த அபிவிருத்தியை எய்துவதற்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதை ஜயம்பதி சுட்டிக்காட்டினார். நிறுவனத்தின் தன்னார்வ செயற்பாட்டாளர்கள் தாம் இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வி நிலையமொன்றில் தமது டிப்ளோமா அல்லது பட்டப்பின்படிப்பை தொடர அவசியமான செலவில் ஒரு பகுதியை அல்லது முழுச்செலவையும் வழங்குவார்கள். “அண்மையில் எமது ஊழியர்களைக்கொண்ட நான்காவது குழுவினர் தமது உயர் கல்வியை ப10ர்த்தி செய்திருந்ததுடன், விற்பனை முகாமைத்துவத்தில் இவர்கள் தேசிய மட்ட டிப்ளோமாவை பெற்றிருந்தனர். இது அவர்களுக்கு சிறந்த பெருமையை தேடித்தந்த விடயமாக அமைந்திருந்தது” என ஜயம்பதி மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் வணிக வனாந்தர செய்கையில் சதாஹரித பிளான்டேஷன்ஸ் முன்னோடியாக திகழ்வதுடன், வனாந்தர செய்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் அனுகூலங்கள் தொடர்பிலும் முதலீடுகளை மேற்கொண்டு எட்டு வருடங்களில் உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடியமை தொடர்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. வணிக வனாந்தரச்செய்கையில் சிறந்த தெரிவாக அகர்வுட் அமைந்துள்ளது. வாசனைத்திரவியங்கள், அழகுசாதனப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் உற்பத்தியில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் முக்கிய உள்ளங்கமாக அகர்வுட் அமைந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

ஊடகவியலாளர் மேரி கொல்வின்னின் படுகொலைக்கான காரணம் வெளியானது…

Mohamed Dilsad

Light showers expected in several areas today

Mohamed Dilsad

Leave a Comment