Trending News

ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மையை மேம்படுத்துவதற்கு தேவையான சகல ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மையை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் புலமைப்பரிசில் நிதியை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 739 ஊடகவியலாளர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஊடகவியலாளர்களுக்கு ஊடகப் பயிற்சிக்கான நிதி உதவி அஸிதிஸி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

தகவல் அறியும் சட்டம் தொடர்பாக இந்த ஆண்டில் விரிவான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட இருக்கின்றது. இதற்கு மேலதிகமாக ஊடகப் பயிற்சி நிறுவனத்தின் பணிகளும் விரிவுபடுத்தப்படவுள்ளன.

ஊடகப் பயிற்சித் திட்டத்தின் கீழ் 60 ஊடகவியலாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரையிலான நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மீள அறவிடப்படமாட்டாது என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் ரமணி குணவர்த்தன மற்றும் ஏனைய அமைச்சின் உயர் அதிகாரிகளும் ,ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Federer wins in three sets on return to tennis

Mohamed Dilsad

தவறாக குத்தப்பட்ட TATTOO-பாடகிக்கு வந்த சோதனை

Mohamed Dilsad

சுகாதார , கல்வி மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு

Mohamed Dilsad

Leave a Comment