(UTV|COLOMBO)-அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறுவர்களை பயன்படுத்தவேண்டாம் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அனைத்து அதிகாரக்கட்சிகளிடமும் சுயேட்சைக்குழுக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சந்தப்பத்தில் சிறுவர்களை பல வழிகளில் அரசியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளசெய்வதன் மூலம் அவர்களது அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தாக்கம் ஏற்படுமாயின் அது சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகமாகும். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் 1929 என்ற தொலைபேசியின் ஊடாக தகவல் தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]