Trending News

தொழிலிட வன்முறைகள் தொடர்பான முறைபாடுகள் குறைந்துள்ளது.

(UTV|COLOMBO)-ஐக்கிய அரபு ராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர்களிடம் இருந்து, தொழிலிட வன்முறைகள் தொடர்பான முறைபாடுகள் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு ராச்சியத்துக்கான இலங்கை தூதுவர் சுலைமன் ஜே மொஹடீன் இதனை கல்ஃப் நியுஸ் என்ற இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், மாதந்தம் 30க்கும் அதிகமான தொழிலிட வன்முறைகள் குறித்த முறைப்பாடுகள் இலங்கையர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும்.
ஆனால் தற்போது அது மாதாந்தம் 4அல்லது 5ஆக குறைவடைந்திருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டரீதியான அறிவுறுத்தல்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளால், தொழில் தருணர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனமாற்றமே இதற்கான காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு ராச்சியத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களில் 66 சதவீதமானவர்கள் வீட்டுப் பணியாளர்களாக இருக்கும் அதேநேரம், 33 சதவீதமானவர்கள் திறன் வேலையாட்களாகவும், தொழிலதிகாரிகளாகவும் உள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மின் உற்பத்தி நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பு

Mohamed Dilsad

Iran – Sri Lanka leaders meet

Mohamed Dilsad

Total government revenue increases

Mohamed Dilsad

Leave a Comment