Trending News

துண்டிக்கப்பட்ட தலை முல்லேரியா கொஸ் மல்லியினுடையது

(UTV|COLOMBO)-வாழைத்தோட்டம் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மனித தலை முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த பண்டிதகே ஷாந்த குமார எனப்படும் “கொஸ் மல்லி” என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயக்க மாவத்தையில் நேற்று (07) மனித தலை ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

இது தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றவியல் பிரிவு இணைந்து நடத்திய விசாரணையில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலிலேயே இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 16 ஆம் திகதி இந்த பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் இவர் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்

Mohamed Dilsad

Brazilian Judge Orders Release of Former President Temer

Mohamed Dilsad

Indonesia says over 180 could be dead after tourist boat sinks

Mohamed Dilsad

Leave a Comment