Trending News

“மகளிர் தினங்கள் ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாகவே இருக்கின்றன”

(UTV|COLOMBO)-சில நிகழ்வுகளோடும், சபதங்களோடும் மகளிர் தினங்கள் நின்று விடாது அடுத்த  மகளிர் தினம் வரும் வரை நாம் காத்திராது,  பெண் சமுகத்தின் விடிவுக்காக  காத்திரமான நடவடிக்கைகளுக்காக  தொடர்ச்சியாக போராடுவதே நமக்கான உரிமைகளையும், மரபுகளையும் வென்றெடுப்பதற்கான தீர்வாக அமையும் என்று  WOSR (டபிள்யூ. ஓ எஸ் ஆர்) பெண்கள் அமைப்பின் ஸ்தாபகரும், தலைவியுமான ரோஹினா மஹரூப் தெரிவித்தார்

 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பபட்ட நிகழ்வில் சிறப்பு பேசசாளராக கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் கூறியதாவது

பெண்கள் சுதந்திரம்,  பெண்கள் சமத்துவம் , அரசியலில் 25  சதவீத  இட ஒதுக்கீடு  என்பன வருடாவருடம் இடம்பெறும் மகளிர் தினங்களில்  முக்கிய தொனிப்பொருள்களாக காணப்படுகின்றன.  என்றாலும்  எத்தனை வீதம் அவை நடைமுறையில் சாத்தியம் என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே  உள்ளது.

பல பெண்கள் அமைப்புகள் பலதரப்பட்ட நிகழ்வுகளை வருடாந்தம் ஒழுங்கு செய்வதை நாம் அவதானித்திருக்கிறோம், அதில் அதிதியாகவும்  கலந்துகொண்டிருக்கிறேன் .  ஆனால், இவற்றால் நாம் அடைந்த பயன் என்னவென்று நோக்கினால்,அது  அணு பூஜ்ஜியதாதை விட சற்றுக் கூடுதலாகவே  இருக்கும்.  ஊடகங்களுக்கு அன்று அது ஒரு செய்தியாகவும், சமூகத்திற்கு அன்று அது நொறுக்குத் தீனியாகவும் இருக்கும். ஆனால், அடுத்த நாளே வேதாளம் முருங்கை மரம் ஏறும்.  கசப்பாக இருந்தாலும் இதுவே யதார்த்தமான நிலையாகும்.

இக்கட்டான இன்றைய அரசியல் நெருக்கடி நேரத்தில் , நம் பெண்கள் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல உள்ளது . அதில் மிக முக்கியமாக நான் காண்பது,  இளம்பராயப் பெண்பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையை ஆகும்.  கடந்த காலங்களின் மிகச் சிறந்த உதாரணம், தாருன் நுஸ்ரா அநாதை இல்லத்தில்  இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகம்.  அரசியல் ரீதியாகவும், ஊடக ரீதியாகவும் பலவித அதிர்வலைகளை இது ஏற்படுத்தினாலும், எழுந்த வேகத்தில் அமர்ந்து விட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இளம் சந்ததியினர் நம் எதிர்கால முதுகெலும்புகள். அவை உடைபடுவதை நாம் வேடிக்கை பார்க்கிறோம், நமக்கான படுகுழியை நாமே வெட்டிக் கொள்கிறோம்.  எனவே சில நிகழ்வுகளோடும், சபதங்களோடும் மகளிர் தினங்கள் நின்று விடாது , அடுத்த  மகளிர் தினம் வரும் வரை காத்திராது,   காத்திரமான முடிவுகளை எடுப்பதற்கு நாள்தோறும் போராடுவதே நமக்கான உரிமைகளையும், மரபுகளையும் வென்றெடுப்பதற்கான தீர்வாக நான் கருதுகிறேன் என தெரிவித்தார்.

 

 

அஸீம் கிலாப்தீன்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Emergency Regulations extended by another month – [PHOTOS]

Mohamed Dilsad

Two Persons die During Wadduwa hotel party

Mohamed Dilsad

25 killed in Afghan army helicopter crash

Mohamed Dilsad

Leave a Comment