Trending News

490 வது பொலிஸ்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு

(UTV|KILINOCHCHI)-இலங்கையில் 489 பொலிஸ் நிலையங்கள் இருக்கின்ற நிலையில்  490  வது பொலிஸ்நிலையம் கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று வடமாகாண  சிரேஸ்ட  பிரதிப்பொலிஸ்மா அதிபர் றோசான் பெர்னாண்டோ, கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான  பிரதிப்பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்ன மற்றும்    சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  கணேசநாதன்  ஆகியோரால் இன்று காலை பத்துமணியளவில்  திறந்துவைக்கப்பட்டுள்ளது

இவ் பொலிஸ் நிலையமானது யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்றப்பட்டதில் இருந்து பொலிஸ் காவலரானாக இயங்கி வந்தது இக் காவலரண் மிகவும் சிறப்பாக இயங்கியமையால் இது பொலிஸ் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு  இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது
அக்கராயன் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரியாக  எம்.எம்.டி.என்  சத்துரங்க  அவர்களை  பொலிஸ்  தலைமை அலுவலகத்தால் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர் கடந்த காலத்தில் தர்மபுரம் பொறுப்பதிகாரியாக செயற்பட்டதுடன் இவர் சிறந்த பொலிஸ் சேவைக்காக இவர் பலமுறை கௌரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ்.என்.நிபோஜன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Pay water bills at post offices

Mohamed Dilsad

Award-winning Hollywood actress Ashley Judd in Sri Lanka as UN Goodwill Ambassador

Mohamed Dilsad

13 Foreigners arrested for visa fraud

Mohamed Dilsad

Leave a Comment