Trending News

அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு

(UTV|INDIA)-நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் (75) `தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அமீர் கான், கத்ரீனா கெய்ப் நாயகன், நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்படிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து வந்தது. இதில் அமிதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் நடிகர் அமிதாப் பச்சன் சில மாதங்களாக ஓய்வின்றி தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும், இரவில் தூக்கமில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாலும் உடல் சோர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட உடல் சோர்வால் அமிதாப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர். அதனைத் தொடர்ந்து மும்பையில் இருந்து சிறப்பு மருத்துவர்களும் ஜெய்ப்பூருக்கு விரைந்தனர்.

கடந்த மாதமும் இதேபோல் உடல்நலக்குறைவால் அமிதாப் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

World Bank roundtable discussion in Sri Lanka to address nutrition for poor

Mohamed Dilsad

IATBU Conference commenced under President’s patronage

Mohamed Dilsad

பெண் சட்டத்தரணி பிணையில் விடுதலை

Mohamed Dilsad

Leave a Comment