Trending News

குப்பைகளை உரிய முறையில் வகைப்படுத்தினால் சிக்கல் இல்லை

(UTV|COLOMBO)-கொழும்பின் குப்பைகளை உரிய முறையில் வகைப்படுத்திக் கொடுத்தால், முத்துராஜவல குப்பை மேட்டில் அதனைக் கொட்டுவதற்கு தயார் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் குப்பை முகாமைத்துவத்துக்கும் தமது அமைச்சுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பின் குப்பைகளை கொழும்பு மாநகர சபைதான் முகாமைத்துவம் செய்கிறது.

இந்த நிலையில், குப்பை முகாமைத்துவம் தொடர்பான உதவிகள் மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த முகாமைத்துவ பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது மாநகர சபையின் கடமையாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

“தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழி சுமத்துகிறார்கள்” கொழும்பில் அமைச்சர் ரிஷாட்!

Mohamed Dilsad

Indonesia Tsunami: At least 408 people killed, rescuers dig through rubble for survivors

Mohamed Dilsad

பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்தவர் கிளிநொச்சியில் கைது

Mohamed Dilsad

Leave a Comment