Trending News

பாலைவனத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய துபாய் மன்னர்

(UTV|DUBAI)-துபாய்க்கு மெக்சிகோவை சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்து இருந்தனர். அவர்களது கார் அங்குள்ள பாலைவனத்தில் வந்தபோது மணலில் சிக்கியது. எனவே அவர்களால் அங்கிருந்து செல்ல முடியவில்லை.

இதனால் பாலைவனத்தில் தவித்துக் கொண்டிருந்தனர். அப்போது துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரகித் அல் மக்டோம் தனது குழுவினருடன் அந்த வழியாக காரில் வந்தார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தலைவராகவும் இருக்கிறார். அவர் பாலைவனத்தில் தவித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பார்த்துவிட்டு அவர்களிடம் சென்று விவரம் கேட்டறிந்தார். பின்னர் மணலில் சிக்கிய காரை மீட்டு வெளியே எடுக்கும்படி தனது குழுவினருக்கு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அவர்கள் மணலில் சிக்கிய காரை வெளியே மீட்டனர்.

அதன்பிறகு அவர்கள் மன்னருக்கு நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து ஒரு பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் தங்களுக்கு உதவிய மன்னருக்கு நன்றி தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 40 பேர் கைது

Mohamed Dilsad

Facebook to ban white nationalism and separatism

Mohamed Dilsad

Three including teachers arrested for photographing ballot paper

Mohamed Dilsad

Leave a Comment