Trending News

விஸ்வரூபம்-2 பட டிரைலர், இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த திட்டம்

(UTV|INDIA)-தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது. படஅதிபர்கள் போராட்டம் முடிந்த பிறகு டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா ஏபடரல் 27-ல் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இன்னமும் பெறப்படாத நிலையில், காலா படத்திற்கு முன்னதாகவே விஸ்வரூபம்-2 படத்தை திரைக்கு கொண்டுவர கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கமல் விரைவில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கண்டிப்பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

Mohamed Dilsad

இலங்கையைப் பாதுகாப்போம்’ அமைப்பு சபாநாயகருக்கு கையளித்துள்ள அறிக்கை!

Mohamed Dilsad

Fair weather will prevail over the country

Mohamed Dilsad

Leave a Comment