Trending News

45 நாட்களில் முடிந்த ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

(UTV|INDIA)-கிளாப்போர்ட் புரொடக்ஷன் நிறுவனத்தின் நிறுவனரும் – நடிகருமான வி சத்தியமூர்த்தி தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது.

இப்படத்தை, அறிமுக இயக்குநர் – ‘எருமசாணி’ புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி இருக்கிறார். ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ புகழ் கோபி – சுதாகர், ‘எரும சாணி’ புகழ் விஜய் – ஹரிஜா, ‘புட் சட்னி’ புகழ் அகஸ்டின், ‘டெம்பில் மங்கிஸ்’ புகழ் ஷா ரா – அப்துல் மற்றும் விஜே ஆஷிக் ஆகியோர் மிக முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் பணியாற்றும் நடிகர் – நடிகைகள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவருமே 21 வயதிற்கு கீழ் இருப்பது தான் இந்த படத்தின் தனிச்சிறப்பு. இளம் கலைஞர்களின் தனித்துவமான படைப்பில் உருவாகும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஜோஷ்வா ஜே பெரேஸ் (அறிமுகம்), இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் (அறிமுகம்), படத்தொகுப்பாளராக தோபிக் – கணேஷ் (அறிமுகம்) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் கூறும்போது, “அறுபது நாட்களில் நிறைவு செய்ய வேண்டிய படப்பிடிப்பை வெறும் 45 நாட்களில் நிறைவு செய்து இருக்கிறார், அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட். அவர் தமிழ் திரையுலகில் ஆழமாக கால் பதிப்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். இப்படத்தில் பணியாற்றி இருக்கும் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும், நடிகர் – நடிகைகளும், தங்களின் முழு ஒத்துழைப்பை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
மேலும், ‘யூடியூப்’ சமூக வலைத்தளத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் கலைஞர்கள் பலரை, ஒரே படத்தில் ஒன்று சேர்த்து இருக்கும் பெருமை எங்களின் ‘கிளாப்போர்ட்’ தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்திருக்கின்றது. கோடை விருந்தாக வருகின்ற மே மாதம் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்றார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

பிரபல நடிகர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

Mohamed Dilsad

ஆகஸ்ட் 02 ஆம் திகதி கண்டி எசல பெரஹெர ஆரம்பம்

Mohamed Dilsad

Heavy traffic in Technical Junction due to a protest march

Mohamed Dilsad

Leave a Comment