Trending News

குவைத்தில் பிலிப்பைன்ஸ் வேலைக்கார பெண்ணை கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை

(UTV|KUWAIT)-பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஜோனா டெமாபெலிஸ். இவர் குவைத்தில் நடெர் ஈசம் ஆசப்- மோனா தம்பதியின் வீட்டில் வேலை செய்தார். நடெர் லெபனானையும், மோனா சிரியாவையும் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் ஜோனாவை நடெர்- மோனா தம்பதி கொலை செய்தனர்.

பிணத்தை அவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் இருவரும் தங்களது சொந்த நாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.

இந்த கொலையில் நீண்ட நாட்களாக துப்பு துலங்கவில்லை. அதனால் குவைத்துக்கும், பிலிப்பைன்சுக்கும் இடையே தூதரக ரீதியில் பிரச்சினை உருவானது. பிலிப்பைன்ஸ் நாட்டினர் வேலைக்காக குவைத் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஒருஆண்டுக்கு பிறகு ஜோனாவின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. இதற்கிடையே சர்வதேச போலீசின் உதவியுடன் நடெர் லெபனானிலும், மோனா டமாஸ்கசிலும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது குவைத் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு நடெர் அவரது மனைவி மோனா ஆகியருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Parliament staff fears gas leak

Mohamed Dilsad

Six including Madush’s cousin deported from Dubai

Mohamed Dilsad

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள் 

Mohamed Dilsad

Leave a Comment