Trending News

21ஆவது பொதுநலவாய விளையாட்டுப்போட்டி நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO)-21ஆவது பொதுநலவாய ஒன்றிய விளையாட்டுப்போட்டிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

இந்த வைபவம் கோல்கோட் நகரில் உள்ள ஹறாரா விளையாட்டு மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை நாளை மறுதினம் முதலாவது போட்டியை எதிர்கொள்கின்றது. இதில் இலங்கை வீர வீராங்கனைகள் நீச்சல் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக பொதுநலவாய ஒன்றியத்தின் விளையாட்டுப்போட்டியில் பங்குகொள்ளும் இலங்கை குழுக்கான அதிகாரி சந்தன லியனகே எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

போட்டியில் கலந்துகொள்ளும் 81 வீரர்கள் இதுவரையில் அவுஸ்ரேலியா வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் தாம் பங்கு கொள்ளும் போட்டிகள் தொடர்பிலான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். ஜிம்னாஸ்ரிக்குழுவினர் உள்ளிட்டோர் தமது திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை இதன் ஆரம்ப வைபவம் நாளை அவுஸ்ரேலிய கோல்ட்கோஸ்ட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இம்முறை நடைபெறவுள்ள பொதுநலவாய ஒன்றியத்தின் விளையாட்டுப்போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடைபெறவுள்ள விளையாட்டு கிராமத்தில் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றினால் எந்தவித பாதிப்பும் எவருக்கும் இடம்பெறவில்லை. விளையாட்டுப்பேட்டியில் கலந்துகொள்ளும் வீர வீரங்கனைகளை இக்கிராமத்திலுள்ள அவுஸ்ரேலிய வீரர்கள் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்று வருகின்றனர்.

இதுதொடர்பான வரவேற்பு நிகழ்வு கடந்த 2ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது இலங்கை வீரர்களுக்கும் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. நாளை ஆரம்பமாகவுள்ள 21ஆவது பொதுநலவாய விளையாட்டு வைபவம் பாரம்பரிய கலாச்சார ரீதியில் நடத்துவதற்கு சகலஏஏற்பாடுகளையும் அவுஸ்ரேலியா மேற்கொண்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Showers expected – Met. Department

Mohamed Dilsad

Update: வடமத்திய மாகாண சபை முதலமைச்சருக்கு எதிரான சத்தியகடதாசி நிராகரிப்பு

Mohamed Dilsad

எரிபொருள் விலைத் திருத்தமானது இன்று

Mohamed Dilsad

Leave a Comment