Trending News

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டுக்கு மேலாக இடைக்கால பருவப்பெயர்ச்சி நிலைமைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

மேற்கு , சப்ரகமுவ, தெற்கு , வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, தென் மற்றும் தென்கிழக்கு கரையோரப்பகுதிகளில் காலைவேளையில் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலைவேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பிரதேசங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக காற்றுவீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

President sought Supreme Court opinion on term of office – PMD

Mohamed Dilsad

IMF approves Sri Lanka’s fourth review and more funds

Mohamed Dilsad

Wellington teenager in induced coma after tragic accident during club rugby match

Mohamed Dilsad

Leave a Comment