Trending News

2015 ஜனவரி 8 மக்கள் ஆணையின்படி அரச பயணம் தொடரும் – பிரதமர்

(UTV|COLOMBO)-நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி பொதுமக்கள் வழங்கிய மக்கள் ஆணை மேலும் வலுவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் அரசாங்கம் முன்னோக்கி பயணிக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

புதிய பயணத்திற்கான அடிப்படைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ள பிரதமர் முன்பிலும் பார்க்க பொதுமக்களுடன் நெருக்கமான முறையில் அபிவிருத்திபணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பிரதமர் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை தனிநபரை பாதுகாக்கும் முயற்சியாக கருதி எதிர்கொள்ளவில்லை. மாறாக அரசாங்கத்தையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் எதிர்கொண்டதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை முன்னிலையாகுமாறு கோரிக்கை

Mohamed Dilsad

Death toll mounts as wildfires rage across California

Mohamed Dilsad

Excise Dept to axe synthetic toddy industry from today

Mohamed Dilsad

Leave a Comment