Trending News

“மஞ்சள் நிற கோழி இறைச்சிகளில் போஷாக்கும் சுவையும் அதிகம்” – கலாநிதி கிரிஷாந்தி பிரேமரத்ன

(UTV|COLOMBO)-ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காக பலர் தமது உணவுகளில் இறைச்சியை அதிகம் சேர்க்கின்றனர். மீன் மற்றும் ஏனைய இறைச்சி வகைகளுடன் ஒப்பிடுகையில் கோழி இறைச்சியானது மக்களால் கொள்வனவு செய்யக்கூடிய விலையில் உள்ளதுடன் போஷாக்கும் நிறைந்தது. அத்துடன் புது கோழி இறைச்சியை கொள்வனவு செய்ய வாடிக்கையாளர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். புத்துணர்வான மற்றும் உயர் தர உணவுகளை அறிந்துகொள்ள பல்வேறு அளவுகோல்கள் இருந்தாலும், நிறத்தை அடிப்டையாக கொண்டு புத்துணர்வை தேர்ந்தெடுக்க மக்கள் பழக்கப்பட்டுள்ளனர்.

இருந்தாலும் உரிய புரிந்துணர்வில்லாமல் வாடிக்கையாளர்கள் நிறத்தை அடிப்படையாக கொண்டு கோழி இறைச்சியை தேர்ந்தெடுக்கின்றனர். அத்துடன் சில சமயங்களில் அவர்கள் சரியானதை தேர்ந்தெடுக்க தவறுகின்றனர். மஞ்சள் நிறம் கொண்ட கோழி இறைச்சி புத்துணர்வானது அல்ல என்ற கருத்து அதற்கான சிறந்த உதாரணமாகும். மஞ்சள் நிற கோழி இறைச்சிகளே புத்துணர்வான மற்றும் உயர்த்தர இறைச்சிகள் என்ற கருத்து உலகில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் இடையே நிலவுகின்றது. இருந்தாலும் இலங்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் மஞ்சள் நிற கோழி இறைச்சி நல்லதல்ல என்ற மாற்று கருத்தே நிலவுகின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த உணவு பாதுகாப்பு நிபுணரும் வயம்ப பல்கலைக்கழத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி. கிரிஷாந்தி பிரேமரத்ன அவர்கள்,கோழிகளுக்கு உணவாக வழங்கப்படும் சோளத்தில் அடங்கியிருக்கும் கரோட்டினாய்டு காரணமாக கோழி இறைச்சி மஞ்சள் அல்லது தங்க நிறமாக இருக்கின்றது. அத்துடன் விற்றமின் ஏ அதிகம் கொண்ட சோளத்தில் கரோட்டினாய்டு உள்ளது. சோளத்தை கோழிகளுக்கு வழங்கும்போது இந்த நிறம் கோழிகளுக்கும் கிடைக்கின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற உலகின் பெரிய கோழி பண்ணைகள் உள்ள நாடுகளில் கூட பல வருடங்களாக இந்த சோளத்தை கோழி சாப்பாட்டுக்காக பாவிக்கின்றன என அவர் கூறினார்.

சோளத்தில் உள்ள கரோட்டினாய்டை தமது சரீரத்தில் உற்பத்தி செய்து கொள்ள பறவைகளால் இயலாது. கோழிகள் சாப்பிடும் உணவிலிருந்தே அவை அவற்றின் சரீரத்திற்கு செல்கின்றது. விற்றமின் ஏ அதிகம் கொண்ட கரோட்டினாய்டு சருமம்,கல்லீரல், கொழுப்பு மற்றும் முட்டை கரு ஆகியவற்றில் அதிகம் இருப்பதாக கலாநிதி. கிரிஷாந்தி பிரேமரத்ன சுறினார். அத்தகைய கோழி இறைச்சிகள் மஞ்சள் அல்லது தங்க நிறத்தில் அதிக போஷாக்குடன் காணப்படும் என கூறினார்.

கோழிகளின் உணவிற்காக பயன்படுத்தப்படும் சோளம் மற்றும் சோயா சார்ந்த உணவு வகைகளில் அதிக அளவு கார்போஹைதரேட், கலோரிகள், புரதம் மற்றும் மினரல் உள்ளடங்கி இருப்பதால் அது கோழிகளின் வளர்ச்சிக்கு,எலும்பின் வளர்ச்சிக்கு, சிறுநீரக செயற்பாடுகளுக்கு மற்றும் இருதயத்தின் செயற்பாடுகளுக்கு நல்லது. ஆகையால் சோளத்தை சாப்பிடுவதால் மஞ்சள் மற்றும் தங்க நிறம் கொண்ட கோழிகள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த போஷாக்கையும், சுவையையும் தந்து,உயர்தர உணவையும் தருவதாக கலாநிதி. கிரிஷாந்தி பிரேமரத்ன தெரிவித்தார்.

உள்ளுர் நிறுவனமாக இத்துறையில் முன்னணி இடத்திற்கு வந்திருக்கும் கிறிஸ்ப்றோ நிறுவனம் தாம் உற்பத்தி செய்யும் கோழி இறைச்சிகளின் போஷாக்கு மற்றும் புத்துணர்வு தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே அதிக கவனம் செலுத்துகின்றது. அத்துடன் கோழிகளுக்கு வழங்கப்படும் உணவான சோளத்தை பயன்படுத்துவதை முன்னோடியாக கொண்ட நிறுவனம்; கிறிஸ்ப்றோ என உறுதியாக கூறலாம். கோழிகளின் வளர்ச்சியை அதிகரிக்க மருந்துகளை பாவிப்பதற்கு எதிரான கொள்கை கொண்ட நிறுவனம் கிறிஸப்றோ ஆகும். எந்தவொரு வகையான மருந்துகளையும் பயன்படுத்துவதில்லை. அத்துடன் அரசாங்கத்தால் தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள மருந்து ஊடாக கோழிகளை வளர்ச்சியடையச் செய்யக் கூடாது என்ற கொள்கைக்கு முழுமையான ஆதரவையும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1972 ஆம் ஆண்டு 100 கோழி குஞ்சுகளுடன் ஆரம்பமான கிறிஸ்ப்றோ அன்று முதலே சந்தையில் முன்னணியாக செயற்படுகின்றது. தரம், புத்துணர்வு மற்றும் நவீனமயத்துக்காக அதிக முக்கியத்துவத்தை கொடுத்து இலங்கையின் முன்னணி கோழி உற்பத்தி வர்த்தக நாமமாக முன்னேறியது. தாய் பண்ணை, குஞ்சு பொரிப்பக பண்ணை, புரொய்லர் பண்ணை மற்றும் கோழி உணவு உற்பத்தி மண்டபம் உட்பட படர்ந்து விரிந்த இடத்தை கிறிஸ்ப்றோ கொண்டுள்ளது. “பண்ணையிலிருந்து கரண்டி” வரை என்ற எண்ணமே நிறுவனத்தின் தாரக மந்திரமாகும். கிறிஸ்ப்றோ நிறுவனத்தின் வெற்றிக்கு வெளி கோழி உற்பத்தியளார்கள், சோளம் உற்பத்தியாளர்கள் போன்று இலங்கை வாடிக்கையாளர்களும் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Special probe into discovery of firearm, ammunition, machetes in residence of PS member

Mohamed Dilsad

ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் ரத்து

Mohamed Dilsad

Prime Minister wants India and Japan cash to balance China

Mohamed Dilsad

Leave a Comment