Trending News

நுகர்வோர் சட்டங்களை மீறிய 1997 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

(UTV|COLOMBO)-பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 1997 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடந்த 6 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் சட்டங்களை மீறிய சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் 3,500 இற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஹசித திலகரட்ன மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

NFF Parliamentarian Udayashantha reports to the FCID

Mohamed Dilsad

சிம்பு – ஓவியா இணையும்  படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு….

Mohamed Dilsad

Thikshila De Silva named in Sri Lanka’s T20 squad

Mohamed Dilsad

Leave a Comment