Trending News

இரண்டாயிரத்து 500 இ.போ.ச பஸ் வண்டிகள் சேவையில்.

(UTV|COLOMBO)-பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் நலன்கருதி இன்றும் இரண்டாயிரத்து 500 பஸ் சேவைகள் நடத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை போக்குவரத்துச் சபையும், பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் இணைந்து நேற்று முன்தினமும் இரண்டாயிரத்து 300 பஸ் சேவைகளை நடத்தியிருந்தன. நேற்றும் இரண்டாயிரத்து 500 பஸ் சேவைகள் நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்தார்.

 

நாட்டின் முக்கியமான நகரங்களில் இருந்து ஏனைய பாகங்களுக்கு பஸ் சேவைகள் நடத்தப்படுகின்றன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு மேலதிக பஸ் வண்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ் வண்டிகளில் பயணம் செய்யும் எந்தவொரு பயணியும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை.

எவரேனும் கூடுதலான கட்டணம் கேட்டால் தொலைபேசி வாயிலாக முறையிடலாம். இதற்கு 1955 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பேஸ்புக்கில் இடம்பெற்ற மோசடி குறித்த விசாரணைகள்

Mohamed Dilsad

பஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தம்…

Mohamed Dilsad

அதிக வருமானத்தை பெற்றுள்ள சதொச

Mohamed Dilsad

Leave a Comment