Trending News

மே மாதம் 07ம் திகதி விடுமுறை தினமாக அறிவிப்பு

(UTV|COLOMBO)-2018 மே மாதம் 01ம் திகதிக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை இரத்து செய்யப்பட்டு அதற்கு மாற்றீடாக மே மாதம் 07ம் திகதி அரச மற்றும் வங்கி விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ம் திகதி முதல் மே மாதம் 02ம் திகதி வரை வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மே 01ம் திகதியில் அனுஷ்டிக்கப்படுகின்ற உலக தொழிலாளர் தினம், இலங்கையில் மே மாதம் 07ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி மே 01ம் திகதி உலக தொழிலாளர் தினத்தில் வழங்கப்படுகின்ற அரச மற்றும் வங்கி விடுமுறை மே மாதம் 07ம் திகதி வழங்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து தொழில் தருனர்களும் தமது தொழிலாளர்களுக்கு 1971ம் ஆண்டு 29ம் இலக்க சட்டத்தின் கீழ் மே மாதம் 07ம் திகதி சம்பளத்துடனான விடுமுறை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் அன்றைய தினம் வர்த்தக விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

President on official visit to Seychelles next week

Mohamed Dilsad

24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

Mohamed Dilsad

சைக்கிள் பயிற்றுவிப்பாளருக்கான செயலமர்வு

Mohamed Dilsad

Leave a Comment