(UDHAYAM, COLOMBO) – அரச ஊழியர்கள் நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலம் சேவையாற்ற வேண்டும். ஆனால், அவர்கள் நான்கு மணித்தியாலங்கள் மாத்திரமே ஆக்கபூர்வமாக வேலை செய்கிறார்கள் என்று கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் மக்களுடன் நெருங்கி பணியாற்ற வேண்டும் என்றும் கணக்காய்வாளர் நாயகம் கூறினார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். கொழும்பு மாநகர சபையின் நிதி அறிக்கை பற்றி விளக்கம் அளிக்கும் நோக்கில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 19வது திருத்தத்தின் மூலம் கணக்காய்வாளர் அதிபதியின் அதிகாரங்கள் வலுவாக்கப்பட்டிருப்பதையும். அதனூடாக நல்லாட்சியை சிறப்பாக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
இலங்கையில் அரச ஊழியர்கள் 15 இலட்சம் பேர் உள்ளனர். இவர்கள் மனசாட்சிக்கு அமைவாக வேலை செய்தால், நல்லாட்சி சாத்தியப்படும் என திரு.விஜயசிங்க தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் குறைந்தபட்சம் ஐந்து மணித்தியாலங்களாவது வேலை செய்தால் அரச சேவை சிறப்பாகும் என கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர சபையின் விவகாரங்கள் பற்றிய பேசிய போது, சட்டவிரோத கட்டடங்கள், குப்பை குளங்களை அகற்றுதல், டெங்கு ஆட்கொல்லியை ஒழித்த போன்ற விடயங்கள் மீது கவனம் செலுத்துவது அவசியம் என கணக்காய்வாளர் நாயகம் கூறினார்.
43 வருடங்களின் பின்னர் கொழும்ப நகர சபையின் நிதியறிக்கையில் சிறிது முன்னேற்றம் தென்படுவதாக அவர் தெரிவித்தார்.