(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற உள்ளது.
இன்று இரவு 08.00 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் இடம்பெற உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
மத்திய செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாட தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதா? இல்லையா? என்று இறுதி தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
எவ்வாறாயினும் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேரும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வது கட்டாயம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன கூறினார்.
அந்த உறுப்பினர்கள் நேற்று இரவு விஷேட கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன இதனைக் கூறினார்.
எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு புதிய தோற்றத்துடன் அரசாங்கத்தை நடத்திச் செல்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மகிந்த அமரவீர கூறினார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]