Trending News

கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்

(UTV|FRANCE)-உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் இந்த ஆண்டு நடிகர் தனுஷ் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷின் முதல் ஹாலிவுட் படமாக `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற நாவலை தழுவி காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷீடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
உலக சினிமா சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெரும்பாலான நாடுகளில் சோனி பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது.
வருகிற மே 30-ஆம் தேதி இந்த படம் பிரான்சில் ரிலீசாக இருக்கிறது. அதே வாரத்தில் இந்தியாவிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் புதிய போஸ்டர் மே 11-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Julian Assange: Wikileaks co-founder arrested in London

Mohamed Dilsad

Four inmates escapes form Negombo Prison

Mohamed Dilsad

Mangala Samaraweera appointed UNP Vice Chairman

Mohamed Dilsad

Leave a Comment