Trending News

கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகம் சடுதியாக அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்று தென்கிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோமீற்றர் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக (மணித்தியாலத்துக்கு 70-80கிலோ மீற்றர் வரை) அதிகரித்து வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஓய்வு பெறும் ஆர்.பி.சிங்…

Mohamed Dilsad

Sri Lankan Army captain and a trooper killed in IED attack in Mali

Mohamed Dilsad

Met. Dept. forecasts rain after 2.00 PM

Mohamed Dilsad

Leave a Comment